உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான நிலையில் சுகாதார வளாகம்

மோசமான நிலையில் சுகாதார வளாகம்

கிருஷ்ணராயபுரம், டிச. 10-லாலாப்பேட்டை, சந்தைப்பேட்டை வாரச்சந்தை உட்புறம் உள்ள சுகாதார வளாகம் மோசமாக காணப்படுகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை வாரச்சந்தை புதன்கிழமை தோறும் கூடுகிறது. சந்தை வளாக உள்புறத்தில், பொது சுகாதார வளாகம் அமைந்துள்ளது. தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. வளாகத்தை சுற்றி அதிகமான செடிகள் வளர்ந்து, புதர்போல் இருப்பதால் மக்கள், வியாபாரிகள் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.எனவே, சுகாதார வளாகத்தை புதுப்பிக்க தேவையான நடவடிக்கையை பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை