உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை

கரூர் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை

கரூர் :கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது.மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு, சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.இருப்பினும், கரூர் மாவட்டத்திலும், பல இடங்களிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது, சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை, 6:00 முதல், 6:30 மணி வரை கரூர் நகர், புலியூர், வெண்ணைமலை, தொழிற்பேட்டை, கொளந்தானுார், வெள்ளியணை, தான் தோன்றிமலை, அரசு காலனி, காந்தி கிராமம், ராமானுார், சுக்காலியூர், செல்லாண்டி பாளையம், வேலாயுதம்பாளையம், புகழூர் உள்ளிட்ட பகுதிகளில், இடியுடன் கூடிய கன மழை பெய்தது.கரூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை பெய்த மழையுடன், குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி