உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஹிந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்

ஹிந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், ஹிந்து முன்னணியின் திருச்சி கோட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் கனகராஜ், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், திருப்பரங்குன்றத்தில், முருகனின் புனித தலத்தை கலங்கப்படுத்தும் நபர்களை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பக்தர்களுக்கு பாதுகாப்பு, வழிபாட்டிற்கான வசதிகளை செய்து தர வேண்டும். ரயில் கவிழ்ப்பு சதி திட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ