இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர்: கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், பங்காளதேஷ் நாட்டில், ஹிந்து கோவில்கள் இடித்து தள்ளப்படுவதை கண்டித்தும், ஹிந்துக்கள் மீது நடைபெறும் கொலைவெறி தாக்குதலை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் ரமேஷ் குமார், மாநகர தலைவர் ஜெயம் கணேஷ், செயற்குழு உறுப்பினர் சிவா உள்பட பலர் பங்கேற்றனர்.