தீபாவளி பண்டிகைக்கு தொடர் விடுமுறை ரயில்வே ஸ்டேஷனில் அலைமோதிய கூட்டம்
கரூர்: தீபாவளி பண்டிகையையொட்டி, நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், சொந்த ஊர்க-ளுக்கு செல்ல பொதுமக்கள் குவிந்தனர்.நாடு முழுவதும் ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான, தீபா-வளி நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக, பொது மக்கள் புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்றும், இன்றும் வழக்கமான விடுமுறையாகும். நாளை தீபாவளி பண்டிகை விடுமுறை மற்றும் நாளை மறுநாள் பொதுவிடுமுறை என அரசால் அறிவிக்கப்பட்-டுள்ளது.தொடர்ந்து, நான்கு நாட்கள் விடுமுறை நாள் என்பதால், கரூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் அரசு, தனியார் ஊழியர்கள், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியர் சொந்த ஊர்க-ளுக்கு செல்ல, நேற்று கரூர் ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர். இதனால் ரயில்வே போலீசார், மோப்ப நாய் புயல் உதவியுடன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.* கரூர் ஜவஹர் பஜார், கோவை சாலை ஆகிய இடங்களில் ஜவுளி, வீட்டு உபயோக பொருள்கள் உள்பட வணிகள் நிறுவ-னங்கள் உள்ளன. மேலும், கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பகுதி, எம்.எல்.ஏ., அலுவலக சாலை, கவுரிபுரம் உள்-ளிட்ட பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஜவுளிகள், காலணிகள், பட்டாசு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜவஹர் பஜாரில் பகுதியில் உள்ள கடைகளில், வீட்டு உபயோக பொருள்கள் மற்றும் புத்தாடைகள், பட்டாசுகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். சீருடை போலீசார், சீருடை அல்லாத போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.