உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி, குழந்தையை கொன்று கணவர் தற்கொலை முயற்சி

மனைவி, குழந்தையை கொன்று கணவர் தற்கொலை முயற்சி

கரூர்:கரூர் மாவட்டம், வெங்கமேடு வி.வி.ஜி., நகர், கலைஞர் சாலையை சேர்ந்தவர் செல்வகணேஷ், 48; டெக்ஸ்டைல் தொழிலாளி. அவரது மனைவி கல்பனா, 40; கர்ப்பிணியாக இருந்தார். கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.நேற்று காலை தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த செல்வ கணேஷ் - மனைவி கல்பனா, மகள் சாரதி பாலா, 6, ஆகியோரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், கொசு விரட்டி மருந்தை குடித்து விட்டு, செல்வ கணேஷ் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.கரூர் டவுன் போலீசார் கல்பனா, சாரதி பாலா உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செல்வ கணேஷ், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி