கணவர் மாயம்; மனைவி புகார்
குளித்தலை: குளித்தலை அடுத்த கல்லடை பஞ்., மஞ்சள்பட்டியை சேர்ந்தவர் நாகேஸ்வரி, 23. இவரது கணவர் பிரகாஷ், 24. இவர்களுக்கு திரு-மணமாகி மூன்று ஆண்டுகளாகிறது. இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரகாஷூக்கு, குழந்தைபட்டியை சேர்ந்த கருப்பண்ணன் மகள் விமலா என்பவருடன் பழக்கம் ஏற்-பட்டது. இது குறித்து பிரகாஷ் மனைவி நாகேஸ்வரி கண்டித்-துள்ளார்.கடந்த செப்., 29 மாலை 6:00 மணியளவில் தோகைமலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பிரகாஷ் பின்னர் வீடு திரும்ப-வில்லை. அவரது மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்-டுள்ளது. குழந்தைபட்டி கிராமத்திற்கு சென்று விமலாவை பார்த்தபோது விமலாவையும் காணவில்லை.தனது கணவர் காணாமல் போனது குறித்து பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என, மனைவி நாகேஸ்வரி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.