மேலும் செய்திகள்
வே.பாளையம் அருகே தோட்டத்தில் தீ விபத்து
02-Aug-2025
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே மனைவி, குழந்தைகளை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார். வேலாயுதம்பாளையம், புகழூர் ைஹஸ்கூல் மேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன், 28, டிரைவர். இவரது மனைவி கனிஷ்கா, 22. இவர்களுக்கு ஜகஸ்ரீகா என்ற மகளும், நிபுணன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம், சரவணனுக்கும், கனிஷ்காவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு, சரவணன் வேலைக்கு சென்று விட்டார். ஆனால், வீட்டில் இருந்த கனிஷ்கா மற்றும் குழந்தைகளை காணவில்லை. இதுகுறித்து, சரவணன் போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
02-Aug-2025