சட்ட விரோதமாக மது விற்றவர் கைது
சட்ட விரோதமாகமது விற்றவர் கைதுஅரவக்குறிச்சி, நவ. 26-சின்னதாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு பிரிவு சிறப்பு எஸ்.ஐ., செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் சின்னதாராபுரம் அருகே ராஜபுரம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள இந்தியன் காஸ் குடோன் அருகே, சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக, மது விற்பனையில் ஈடுபட்ட சின்னதாராபுரம் அருகே உள்ள தொக்குப்பட்டிபுதுார் பகுதியை சேர்ந்த சங்கர், 55, என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த, 4,000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை சின்னதாராபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.