உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் இரு சக்கர வாகனங்களில் நுாதன முறையில் மணல் கடத்தல் ஜோர்

கரூரில் இரு சக்கர வாகனங்களில் நுாதன முறையில் மணல் கடத்தல் ஜோர்

கரூர்: கரூர் மாவட்டத்தில், காவிரியாற்றில் இருந்து, இருசக்கரவாக-னங்கள் மூலம், சாக்கு மூட்டைகளில் மணல் கடத்துவது ஜோராக நடந்து வருகிறது. அதை, அரசு துறை அதிகாரிகள், போலீசார் கண்டு கொள்ளாததால், கிராமப் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் அமலாக்கத்துறை நடவ-டிக்கை காரணமாக, கரூர் மாவட்டத்தில், காவிரி, அமராவதி உள்ளிட்ட ஆற்றுப்பகுதியில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாட்டு வண்டிகள் மூலம், மணல் அள்ளப்பட்டு, டாரஸ் லாரிகளுக்கு மணல் தாராளமாக சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நுாதன முறையில் இரவு நேரங்களில், காவிரி-யாற்றில் இருந்து மணல் கடத்தப்படுகிறது. குறிப்பாக, அதி-காலை, 12:00 மணி முதல், 5:00 மணி வரை காவிரியாற்றில் இருந்து சாக்கு மூட்டைகளில் அள்ளப்பட்ட மண், இரு சக்கரவா-கனங்கள் மூலம் விடிய விடிய கொண்டு செல்லப்படுகிறது. இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலையில்லாத இளை-ஞர்கள் ஈடுபடுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மணல் கடத்தலை தடுக்கும் முயற்சியில் கிராமப்புற மக்கள் ஈடு-படும் போது அடிதடி வரை நடந்து வருகிறது. திருட்டுதனமாக காவிரியாற்றில் மணல் அள்ளப்படுவதை, பொதுப்பணி, வருவாய் துறை மற்றும் போலீசார் கண்டுகொள்ளவது இல்லை. கரூர் மாவட்டத்தை பொறுத்த வரை மணல் கடத்துவதில், ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகள் என்ற பேதம் இல்லாமல் கை கோர்த்து கடத்தலில் ஈடுபடுகின்றனர்.இருசக்கரவாகனத்தில் மணல் எடுத்து செல்ல உள்ளூர் பிரமு-கர்கள், 300 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இந்த பணம், பொதுப்பணி, வருவாய் துறை மற்றும் போலீசாருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இந்த நிலை தொடர்ந்தால், கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி-யாற்று கிராமப்பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு அபாயம் ஏற்படும் நிலை உருவாகலாம்.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இரு சக்கரவாகனம் மூலம் நுாதன முறையில், மணல் கடத்துவதை தடுக்க கடும் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ