உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாநகராட்சி பகுதிகளில் கொசு உற்பத்தி அதிகரிப்பு

மாநகராட்சி பகுதிகளில் கொசு உற்பத்தி அதிகரிப்பு

கரூர்: மாநகராட்சி பகுதிகளில், கொசுக்களின் இனப்பெருக்கம் அதி-கரித்து வருகிறது. இரவு நேரத்தில் குழந்தைகள் முதல் பெரிய-வர்கள் வரை, கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர்.கரூர் மாநகராட்சியை சுற்றி அமராவதி ஆறு மற்றும் இரட்டை வாய்க்கால் உள்ளது. மேலும், அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலும் உள்ளது.வாய்க்கால்களில் தற்போது தண்ணீருக்கு பதிலாக, சாக்கடை நீரே தேங்கியுள்ளது. இதில் பெரிய கொசுக்கள் உற்பத்தி அதிக-ரித்து, பகல் மற்றும் இரவு நேரங்களில் கொசுக்கடியால், பொது மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.குறிப்பாக பழைய சணப்பிரட்டி பஞ்சாயத்து, இரட்டை வாய்க்கால் செல்லும் பகுதி, அமராவதி ஆற்றின் கரையோர பகு-திகளில் வசிக்கும் மக்கள் கொசுக்கடியால் பரவும் மர்ம காய்ச்-சலால் அவதிப்படுகின்றனர்.பலருக்கு டெங்கு, மலேரியா காய்ச்சல் போன்ற பாதிப்பு ஏற்-பட்டுள்ளது. சாக்கடை கால்வாய், வாய்க்கால் பகுதிகளில் தேங்கி-யுள்ள கழிவுகளை அகற்றி, கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ