உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பில்லுார் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தல்

பில்லுார் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தல்

குளித்தலை: குளித்தலை அடுத்த பாதிரிப்பட்டி, பில்லுார் சாலையில் பள்ளிப்பட்டி கிழக்கு பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும் எனறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாதிரிப்பட்டி பஞ்., கோட்டப்பட்டி காலனி, குச்சிப்பொம்மாநாயக்கன்பட்டி, கிழக்கு காலனி, இந்திரா நகர், நாகநோட்டக்காரன்பட்டி, பள்ளிப்பட்டி, அண்ணா நகர், கிழக்கு ஊத்துப்பட்டி, மேலமேடு, மேற்கு காலனி உள்பட சுற்றுவட்டாரத்தில், 3,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதேபோல் பில்லுார் பஞ்., பில்லுார் காலனி, அண்ணா நகர் காலனி, டி.களத்துப்பட்டி, ஆணைக்கவுண்டம்பட்டி, முத்துக்கவுண்டம்பட்டி உள்ளிட்ட, 10 க்கும் மேற்பட்ட கிரமங்களில், 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது.இதில் கல்லடை பஞ்., பாதிரிப்பட்டி பஞ்., பொருந்தலுார் பஞ்., பில்லுார் பஞ்., வழியாக திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளுக்கு பலர் சென்று வருகின்றனர். எனவே, இங்குள்ள தரைமட்ட பாலத்தை, உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி