கூடுதல் மின் விளக்கு அமைக்க வலியுறுத்தல்
கரூர்; கரூர்- வெள்ளியணை சாலையில், கூடுதல் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.கரூர் நகரில் இருந்து வெள்ளியணைக்கு, தான்-தோன்றிமலை, வெங்ககல்பட்டி பிரிவு வழியாக சாலை செல்கிறது. அந்த வழியில் மணவாடி, அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பு-றங்களின் பிரிவு சாலைகள் உள்ளன. மேலும், கரூர்--திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே, வெங்ககல்பட்டியில் பாலம் கட்டப்பட்-டுள்ளது. அதன் வழியாக, திண்டுக்கல் மாவட்டத்துக்கு செல்ல, இந்த வெள்ளியணை சாலையை பொது-மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், போதுமான தெரு விளக்குகள் இல்லை. எனவே, வெள்ளியணை சாலையில், தேவையான இடங்-களில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.