கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளியில் பள்ளி கல்விதுறை அமைச்சர் ஆய்வு
கரூர்: கிருஷ்ணராயபுரம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஸ் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் குறித்து கேட்டறிந்தார். தொடு திரையின் வாயிலாக மாணவர்களுக்கு உயிரினங்களின் பெயர்களை சொல்லிக் கொடுத்தார். தொடர்ந்து திறன்மிகு வகுப்பறைக்காக வரப்பெற்ற 'டிவி'க்களை பார்வையிட்டு, விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். விரைவில், பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுரை வழங்கினார்.பள்ளியில் உள்ள கழிவறைகளை சீரமைக்கும் படியும், மாணவர்களுக்காக வகுப்பறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மேஜைகள், இருக்கைகள் குறித்து கேட்டறிந்து, அவற்றை உடனடியாக ஒழுங்குபடுத்துமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.