உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்ய அறிவுறுத்தல்

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்ய அறிவுறுத்தல்

கரூர், விநாயகர் சிலைகளை, நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்ய வழிகாட்டும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்ய வழிகாட்டு முறைகள், மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல் www.tnpcb.gov.inஎன்ற இணையதளத்தில் உள்ளது. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால், குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி, தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமின்றி, சுற்றுச்சூழலின் அழகையும் துாய்மையையும் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும்.துவைத்து மீண்டும் உபயோகிக்ககூடிய, அலங்கார துணிகளையே பயன்படுத்தவும். பிரசாத வினியோகத்திற்கு மக்கும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தவும். மேலும் மாவட்ட நிர்வாகத்தால், அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளை கரைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை