மேலும் செய்திகள்
விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
14-Jun-2025
கரூர், குறைந்த கட்டணத்தில், சர்வதேச அஞ்சல் சேவை வழங்கப்படுகிறது என, கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்திய அஞ்சல் துறையால், சர்வதேச அஞ்சல் சேவைகளான (20 கிலோ வரை) இன்டர்நேஷனல் ஏர்பார்சல், இன்டர் நேஷசனல் ஸ்பீடு மற்றும் இன்டர் நேஷனல் டிராக்டு பாக்கெட் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. மற்ற சர்வதேச அஞ்சல் சேவைகளை ஒப்பிடும் போது, இந்திய அஞ்சல் துறை குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்கி வருகிறது. இந்த சேவையின் சிறப்பு முகாம், கரூர் கோட்டத்தில் உள்ள தலைமை மற்றும் அனைத்து துணை தபால் நிலையங்களிலும் கடந்த, 16 முதல் வரும் ஜூலை, 15 வரை நடந்து வருகிறது. இதன் மூலம், குறைந்த கட்டணத்தில் சர்வதேச அஞ்சல் சேவை வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
14-Jun-2025