உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அ.தி.மு.க.,வினரை மிரட்டி தி.மு.க.,வில் சேர்க்கின்றனர்: மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு

அ.தி.மு.க.,வினரை மிரட்டி தி.மு.க.,வில் சேர்க்கின்றனர்: மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு

கரூர்: ''அ.தி.மு.க., வினரை மிரட்டி தி.மு.க.,வில் சேர்க்கின்றனர்,'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.தான்தோன்றிமலை ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், வெள்ளியணை அருகே, செல்லாண்டிப்பட்டியில், நேற்று செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில், கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது: கரூரில் மனித சங்கிலி போராட்டம் நடத்தக்கூட, போலீசார் அனுமதி வழங்கவில்லை. நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று வரும் அக்., 28ல் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும். வரும் சட்டசபை தேர்தலில், தோல்வி பயத்தால், கரூரில் அ.தி.மு.க.,வினரை மிரட்டி தி.மு.க.,வில் சேர்க்கின்றனர். அ.தி.மு.க.,வில், இரண்டு கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.தான்தோன்றிமலை ஒன்றியத்தில், 303 கிளைகள் உள்ளன. 16,800 படிவங்கள் மூலம் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டை வழங்க தொடங்கியதன் மூலம் தேர்தல் பணி தொடங்கி விட்டது. வரும் சட்டசபை தேர்தலுக்காக, நல்ல அ.தி.மு.க., கூட்டணியை, தலைவர்கள் அறிவிப்பார்கள். வரும், 2026ல் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை