உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முதலாம் ஆண்டு இளநிலை மாணவர்களுக்கு அறிமுக நிகழ்ச்சி

முதலாம் ஆண்டு இளநிலை மாணவர்களுக்கு அறிமுக நிகழ்ச்சி

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி, அரசு கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் நவ்ஷாத் தலைமை வகித்து பேசுகையில்,' உயர்கல்வியின் முக்கியத்துவம், ஒழுக்கம், நேர மேலாண்மை, கல்வியில் அர்ப்பணிப்பு மற்றும் கல்லுாரி வழங்கும் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி கொள்வதன் அவசியம், மாணவர்கள் கல்வியிலும், தனித்திறன் வளர்ச்சியிலும் சிறந்து விளங்க வேண்டும்,' என்றார்.வணிகவியல் துறை தலைவர் முனைவர் செந்தில்குமார் வரவேற்றார். ஆங்கிலத்துறை கவுரவ விரிவுரையாளர் சல்மா பானு முன்னிலை வகித்தார். சிறப்பாளராக ஸ்ரீரெங்கா பாலியஸ்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெயஸ்ரீ செந்தில் பங்கேற்றார். தொடர்ந்து பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, மாணவர்களின் கல்வி முன்னேற்றம், கல்லுாரி செயல்பாடு மற்றும் மாணவர் நலத்திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டனர். ஆங்கிலத்துறை கவுரவ விரிவுரையாளர் சுரேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை