குறைதீர் கூட்டத்தில் பெண்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்
கரூர்: கரூரில் நடந்த பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்துக்கு கலெக்டர் தங்கவேல் தலைமைவகித்தார். ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப் பட்டா, வேலை-வாய்ப்பு, உதவி உபகரணங்கள், ரேஷன் அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம், 487 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம், 34 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி-யாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவு-றுத்தினர். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு பயிற்சி முடித்த, 8 பெண்களுக்கு மாவட்ட தொழில் மையம் சார்பில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி நிய-மன ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் சுதா, சப் கலெக்டர் பிரகாசம், மாவட்ட வழங்கல் அலு-வலர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.