உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற எளிதாக்கப்பட்டுள்ளது: கலெக்டர்

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற எளிதாக்கப்பட்டுள்ளது: கலெக்டர்

கரூர், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மருத்துவ சான்று பெற நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் அடையாள அட்டை மற்றும் மருத்துவ சான்று பெறாத மாற்றுத்திறனாளிகள் எளிதில் பெறலாம். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை (பழைய வளாகம்) மாவட்ட ஆரம்ப கால பயிற்சி மையத்தில் மருத்துவ முகாம் நடக்கிறது. மேலும் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை தோறும், கலெக்டர் அலுவலகம், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்கிழமை, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் நடக்கிறது. இங்கு, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்று கொள்ளலாம். மேலும் விபரங்களை கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை, 04324 - 257130 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை