மதுபாட்டில்களுக்கு உரிய தொகை செலுத்தினால் போதும்; கலெக்டர்
கரூர் :டாஸ்மாக்கில் மதுபாட்டிகளுக்கு உரிய தொகை செலுத்தினால் போதும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) சார்பில், 86 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர் வசதிக்கேற்ப, அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும், மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் மதுபானங்கள் பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தி, மதுபாட்டிகளுக்கு உரிய தொகையை மட்டும் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.