மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
24-Sep-2025
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி தாலுகா அலுவலக வளாகத்தில், ஜாக்டோ ஜியோ மற்றும் இணைப்பு அமைப்புகள் சார்பில், கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் வேலுமணி தலைமையேற்றார். தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர். உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் இணை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள், களப்பணியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் ஆகியோருக்கு, ஊதிய முரண்பாடு நீக்க வேண்டும். கல்லுாரி பேராசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள, சிஏஎஸ் மேம்பாடு மற்றும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கருணை அடிப்படையிலான நியமன உச்சவரம்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும், 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பன உட்பட, 10 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஷாகுல் ஹமீது, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மணிகண்டன், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிய செயலாளர் தங்கவேல், தமிழ்நாடு அரசு மருந்தாளர்கள் சங்க மாநில பொருளாளர் இளங்கோ, சத்துணவு ஊழியர் சங்க துணைத் தலைவர் பாஸ்கரன், வட்டார செயலாளர் தம்பிராஜ், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் தமிழழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
24-Sep-2025