மேலும் செய்திகள்
ஜெ., நினைவு தினம் அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
06-Dec-2024
கரூர்: கரூர் லைட் ஹவுஸ் கார்னரில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமை வகித்து, ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் சின்னசாமி, எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணை செயலர் சிவசாமி உள்பட பல நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.* கரூர் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாவட்ட அலுவலகத்தில், மேற்கு மாவட்ட செயலர் ஆயில் ரமேஷ் தலைமையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் துாவி மவுன அஞ்சலி செலுத்தினர். மாவட்ட பொருளாளர் ஓம் சக்தி சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.
06-Dec-2024