உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விரிவாக்க மையத்தை இணை இயக்குனர் ஆய்வு

விரிவாக்க மையத்தை இணை இயக்குனர் ஆய்வு

குளித்தலை, குளித்தலை அடுத்த, தோகைமலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை, கரூர் வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம் ஆய்வு செய்தார்.தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், பொது பயிர் மதிப்பீடு ஆய்வு திட்ட பணிகளை கள ஆய்வு செய்தார்.அப்போது, தமிழ்நாடு அரசு வழங்கி வரும் வேளாண் திட்டங்கள் அனைத்தும், விவசாயிகளுக்கு முறையாக குறிப்பிட்ட கால கெடுவிற்குள் சென்று அடைகிறதா என ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து, கூடலுார் கிராமத்தில் புதிய தரிசு நில தொகுப்பு ஏற்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.தோகைமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா, வேளாண்மை அலுவலர் அர்ச்சுணன், துணை வேளாண்மை அலுவலர் சுந்தர்ராஜன், உதவி வேளாண்மை அலுவலர் சக்திவேல், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சிவனேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி