மேலும் செய்திகள்
வல்லம் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு
11-Sep-2025
குளித்தலை குளித்தலை வட்டாரத்தில் நடைபெறும் வேளாண்மை பணிகளை, கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். குளித்தலை வட்டாரத்தில் நேற்று முன்தினம், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம் விதை கிராம திட்டத்திலிருந்து விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள், ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்திலிருந்து பழ வகை மரச்செடிகள், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட நோட்டீஸ்களை விவசாய பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர், இனுங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உர கிடங்குகளை ஆய்வு செய்து, உர இருப்புகளை சரி பார்த்தார். தொடர்ந்து இனுங்கூர் மாநில அரசு விதை பண்ணையை சுற்றி பார்த்தும், பண்ணை மேம்பாட்டு குழு கூட்டம் நடத்தி, பண்ணை வருவாய் அதிகரிக்க அறிவுரை வழங்கினார்.வேளாண்மை துணை இயக்குனர் ராமசாமி, குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் குமரன், நங்கவரம் துணை வேளாண்மை அலுவலர் கணேசன், இனுங்கூர் அரசு விதை பண்ணை மேலாளர் சுரேந்தர் உள்பட உள்ளூர் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
11-Sep-2025