மேலும் செய்திகள்
கொல்லங்குடியில் பங்குனி தேரோட்டம்
18-Mar-2025
குளித்தலை: குளித்தலை தாலுகா அலுவலகத்தில், கள்ளை காளியம்மன் கோவில் தேர் திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்து, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.குளித்தலை அடுத்த, கள்ளை கிராமத்தில் ஹிந்து சமய அறநி-லையத்துறை கட்டுப்பாட்டில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகி-றது. நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு மலர் வழிபாடு நடந்-தது. நாளை (14ல்) இரவு அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்த-ருளல் மற்றும் முத்து பல்லக்கு திருவீதி உலா நடைபெறுகிறது. 15 அதிகாலை திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 17ல் உதிர்வாய் துடைப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.தேர் திருவிழாவில் கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் மற்றும் குளித்தலை, தோகைமலை, திருச்சி, மணப்பாறை சுற்று பகுதி-களை சேர்ந்தவர்கள் திருத்தேர் வடம் பிடிப்பர். பக்தர்கள் நலன் கருதி, திருவிழா பாதுகாப்புடன் அனைத்து அடிப்படை வசதிக-ளுடன் நடைபெறுவது குறித்து நேற்று காலை, தாலுகா அலுவல-கத்தில் தாசில்தார் இந்துமதி தலைமையில் முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கோவில் செயல் அலுவலர் சந்திரசேகரன், மின்வாரிய உதவி பொறியாளர் நடராஜன், முசிறி தீயணைப்புத்துறை அலுவலர் கர்ணன், தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயவேல்காந்தன், மண்டல துணை தாசில்தார் நீதிராஜன், தோகைமலை ஆர்.ஐ., முத்துக்கண்ணு, வி.ஏ.ஓ., வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
18-Mar-2025