டி.என்.பி.எல்., பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
கரூர், கரூர் மாவட்டம், புகழூர் டி.என்.பி.எல்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் துணை பொது மேலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். இங்கு, அவரது பிறந்த நாளையொட்டி பேச்சு போட்டி நடந்தது. அதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.விழாவில், டி.என்.பி.எல்., மெட்ரிக் பள்ளி ஒருங்கிணைப்பாளர் கீதா, டி.என்.பி.எல்., சிமென்ட் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் தினகரன், டி.என்.பி.எல்., பள்ளிக் குழுமத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பெமிலா பேகம் உள்பட பலர் பங்கேற்றனர்.