உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கார் விபத்தில் தாய், மகள் பலி

கார் விபத்தில் தாய், மகள் பலி

குளித்தலை: குளித்தலை காவேரி நகர் என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் சிங்காரம் (51) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி சிவகாமி (43) மகள்கள் ரேவதி (20) கலையரசி (14) ஆகியோருடன் மாருதி காரில் பொன்னமராவதியில் நடந்த திருமணத்துக்கு நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு சென்றார். காரை சிங்காரம் ஓட்டினார். கார் மணப்பாறை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே சென்ற லாரி மீது மோதியது. அதில் படுகாயமடைந்த சிவகாமி, திருச்சிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மேலும், அன்றிரவு 10 மணிக்கு மகள் ரேவதியும், திருச்சி அட்லஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். குளித்தலை போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை