உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிக்பாக்கெட் திருடர்களின் பிடியில் கரூர் பஸ் ஸ்டாண்ட்: பயணிகள் கடும் அவதி

பிக்பாக்கெட் திருடர்களின் பிடியில் கரூர் பஸ் ஸ்டாண்ட்: பயணிகள் கடும் அவதி

பிக்பாக்கெட் திருடர்களின் பிடியில்கரூர் பஸ் ஸ்டாண்ட்: பயணிகள் கடும் அவதிகரூர், நவ. 16-பிக்பாக்கெட் திருடர்களின் தலைமை நிலையமாக, 'ஏ' கிரேடு அந்தஸ்து பெற்ற கரூர் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இதனால், பயணிகள் அவதியுறுகின்றனர்.தமிழகத்தில், தொழில் நகரத்தில் ஒன்றான கரூரில், பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, சுத்தம் இல்லாத கழிப்பிடங்கள், குண்டும், குழியுமான தரைத்தளங்கள், ஆக்கிரமிப்புகள் என பல குறைபாடுகள் பஸ் ஸ்டாண்டில் நிறைந்துள்ளது. மேலும் குடிநீர் வசதி, மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் நிற்க கூட அடிப்படை வசதி இல்லை.இந்நிலையில் கடந்த சில நாட்களாக, கரூர் பஸ் ஸ்டாண்டில் பிக்பாக்கெட் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை, இரவு நேரங்களில் பயணிகளை நுாதன முறையில் திசை திருப்பி, பாக்கெட்டில் உள்ள பணத்தை அடித்து செல்லும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது.மேலும், பஸ் ஸ்டாண்டில் இருந்த புறக்காவல் நிலைய கட்டடம், சேதமடைந்ததால் இடிக்கப்பட்டுள்ளது. எனவே, திருடர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.நேற்று அன்னாபி ேஷக விழாவையொட்டி, கரூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். அதில் சிலர், பர்ஸ், பை மற்றும் மொபைல் போனை பறி கொடுத்து விட்டு புலம்பி கொண்டிருந்தனர். எனவே பிக்பாக்கெட் திருடர்களை ஒழிக்க, டவுன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி