உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஐ.ஜி.,யை சந்தித்த கரூர் கலெக்டர்

ஐ.ஜி.,யை சந்தித்த கரூர் கலெக்டர்

கரூர்:கரூரில், த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும், சிறப்பு புலனாய்வு குழு ஐ.ஜி.,யை, கலெக்டர் நேற்று சந்தித்து பேசினார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ம் தேதி இரவு, த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி, 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் கரூர் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, பயணியர் மாளிகையில் விசாரித்து வரும் ஐ.ஜி., அஸ்ரா கார்க்கை, கலெக்டர் தங்கவேல் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, 15 நிமிடம் நீடித்தது. பிறகு, வெளியே வந்த கலெக்டரிடம், சந்திப்பு குறித்து கேட்ட போது பதில் கூறாமல் சென்று விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை