உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உரிய காலத்தில் வரி செலுத்தாவிட்டால் அபராதம் விதிப்பு கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

உரிய காலத்தில் வரி செலுத்தாவிட்டால் அபராதம் விதிப்பு கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

கரூர்: கரூர் மாநகராட்சியில் உரிய காலத்தில் வரி செலுத்தவில்லை என்றால் மாதந்தோறும், 1 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.கரூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பாதாள சாக்கடை சேவை வரி மற்றும் தொழில் வரி உள்ளிட்டவை வசூலிக்கிறது. இதில், ஆறு மாதத்துக்கு ஒருமுறை என, ஆண்டுக்கு இரு முறை சொத்து வரி செலுத்த வேண்டும். 2022ல் பிறப்பிக்கப்பட்ட தமி-ழக அரசின் உத்தரவுப்படி, 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்-டுள்ளது. இந்த வரி உயர்வு, அக்., 1 முதல் அமலுக்கு வந்திருக்கிறது.நடப்பு நிதியாண்டுகளில் சொத்து வரி வசூலில், கரூர் மாநகராட்சி மாநில அளவில் பின்தங்கி உள்ளது. இச்சூழலில், மாநகராட்-சியின் வருவாயை பெருக்கும் நோக்கத்தில், சர்வேயர் மூலம் வார்டுகளில் உள்ள கட்டடங்கள் மறு அளவீடு செய்யப்படுகின்-றன. கூடுதல் பரப்பு கட்டப்பட்டிருக்கும் கட்டடங்கள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள கட்டடங்க-ளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. வர்த்தக பகுதிகள் நிறைந்த, வார்டுகள் பட்டியலிடப்பட்டு, இவ்-வகை கட்டடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. இவ்வ-கையில், கூடுதல் வரி வருவாயை அதிகப்படுத்த, மாநகராட்சி வருவாய் பிரிவினர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வரியை உரிய காலத்தில் செலுத்தவில்லை என்றால் மாதந்-தோறும், 1 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து அ.தி.மு.க., மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ் கூறியதா-வது: தமிழக அரசின் உத்தரவுப்படி, அக்., 1 முதல் சொத்து வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அக்., 30க்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என்று விளம்பரப்படுத்தப்பட்-டது. ஆனால், அக்., 30க்குள் செலுத்தவில்லை என்றால் மாதந்-தோறும், 1 சதவீதம் அபராத வரி விதிக்கப்படும் என்று விளம்ப-ரப்படுத்தவில்லை. மக்கள் வரி செலுத்தாத ஒவ்வொரு மாதமும் வட்டி போல, 1 சதவீதம் அபராதம் ஏறிகொண்டே செல்லும் என, வரி செலுத்துபவர்களிடம் தெளிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் தவறி விட்டது. கடந்த மாதம் செலுத்த தவறியவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்-குரிய, 2 சதவீதம் அபராதத்துடன் வரி செலுத்த வேண்டி இருக்கும். வரி செலுத்துவது குறித்த விபரங்களை மக்களுக்கு முறையாக தெரியப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வாறு, அவர், கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ