உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்பு குழு கூட்டம்

கரூர் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்பு குழு கூட்டம்

கரூர்: - கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடந்தது.கரூர் எம்.பி.,ஜோதிமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரக குடிநீர் இயக்கம், பாரத பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் போன்ற பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் தூய்மை பாரத இயக்கம், பாரத பிரதமர் ஆதர்ஸ் கிராம யோஜனா, தீன் தயாள் அந்தோதயா யோஜனா, சமூக பாதுகாப்பு திட்டம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு திட்டம், துாய்மை பாரத இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் உள்பட மத்திய அரசின், 37 திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.கூட்டத்தில், கலெக்டர் தங்கவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீ லேகா தமிழ்ச் செல்வன், குளித்தலை சப்-க-லெக்டர் சுவாதிஸ்ரீ உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை