கரூர் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
கரூர், கரூர், தி.மு.க., அலுவலகத்தில், நேற்று மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி ஆலோசனை வழங்கினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு மாநகர, பகுதி, ஒன்றிய, நகரம் உள்பட அந்தந்த பகுதிகளிலும் மற்றும் மாவட்ட சார்பு அணிகள் சார்பில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டும்.நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டங்களை நடத்த வேண்டும். நான்கு தொகுதியில் சராசரியாக, 60 சதவீதம் உறுப்பினர் சேர்க்கையில், தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், கரூர் மாநகர செயலர் கனகராஜ், கரூர் மாநகர பகுதி செயலர்கள் ராஜா, சுப்பிரமணியன், ஜோதிபாசு, குமார், பாண்டியன், ஒன்றிய செயலர்கள் பாஸ்கரன், வேலுசாமி, முத்துக்குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.