உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை அமைச்சருடன் 4 வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும்

கரூர் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை அமைச்சருடன் 4 வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும்

கரூர்: உள்ளாட்சி தேர்தலையொட்டி அனைத்து கட்சி கூட்டம் கரூர் நகராட்சி பெத்தாச்சி கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் பேசியதாவது: தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் உள்ளது. தேர்தல் ஆணையம் உத்தரவுபடி சுவர் விளம்பரங்கள் எழுத கூடாது. அப்படி எழுதப்பட்டிருந்தால் இரண்டு நாட்களில் அழிக்க வேண்டும். சுவரொட்டிகள் மற்றும் ஃபிளக்ஸ் பேனர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையேல் நகராட்சி தரப்பில் அழிக்கப்பட்டு, அதற்குரிய செலவு தொகை சம்பந்தப்பட்ட வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும். வேட்பாளருடன் மூன்று வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும். ஒரு வாகனத்தில் ஐந்து பேர் மட்டுமே இருக்க வேண்டும். அமைச்சர்கள் உடன் கூடுதலாக பாதுகாப்பு வீரர்கள் அடங்கிய வாகனம் ஒன்று செல்லலாம்.

தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து கட்சி நிர்வாகிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார். தி.மு.க., சார்பில் பாபுகுமார், அ.தி.மு.க., சார்பில் பாலகிருஷ்ணன், பா.ஜ., மாவட்ட செயலாளர் கோபி, நகர தலைவர் சிவம் சக்திவேல், இ.கம்யூனிஸ்ட் சார்பில் சண்முக சுந்தரம், மார்க்சிஸ்ட் சார்பில் ஜோதிபாசு, பா.ம.க., நகர செயலாளர் ராக்கி முருகேசன், இனாம் கரூர் நகர காங்., தலைவர் அங்கமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை