உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மேம்பாடு பயிற்சி மாவட்ட மையமாக கரூர் எம். குமாரசாமி கல்லுாரி நியமனம்

மேம்பாடு பயிற்சி மாவட்ட மையமாக கரூர் எம். குமாரசாமி கல்லுாரி நியமனம்

கரூர், தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மாவட்ட மையமாக, கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி-2025 முதல் 2030 வரை நியமிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோராக உருவாக்க பயிற்சி வழங்கப்படும். புதிய யோசனை, திறமையை வளர்ப்பது, பயிற்சி திட்டங்கள், நிதி வாய்ப்புகளை எளிதாக்குதல் ஆகிய ஆலோசனை வழங்கப்படும்.மாவட்ட மையமாக நியமனம் சான்றிதழை, கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி ஐ.ஐ.சி.,ஒருங்கிணைப்பாளர் ராம்பிரதாப்பிடம், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன மாவட்ட திட்ட மேலாளர் சிமியோன்ராஜ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை