உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நடுதலுடன் கோலாகலமாக தொடக்கம்

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நடுதலுடன் கோலாகலமாக தொடக்கம்

கரூர்: கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன், கரூர் மாரியம்மன் கோவில் திரு-விழா கோலாகலமாக தொடங்கியது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கரூர், மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத கடைசியில் திருவிழா தொடங்கி வைகாசி மாதத்தில் முடிவ-டையும். அந்த வகையில் இந்தாண்டுக்கான, மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன், நேற்று கோலா-கலமாக தொடங்கியது. கோவிலுக்கு கம்பம் கொண்டு வந்து தரும் நிகழ்ச்சி, கரூர் அருகே பாலம்மாள்புரத்தில் தொடங்கியது. பரம்பரை பரம்பரையாக கம்பம் எடுத்து வரும் குடும்பத்தை சேர்ந்தவர்கள், மூன்று கிளைகளை உடைய வேப்பமர கம்பத்தை எடுத்து, பாலம்மாள்புரத்தில் உள்ள திடலில் வைத்து புனிதநீர் ஊற்றி பூச்சூடி, கோவிலை நோக்கி ஊர்வலமாக நேற்று காலை, 7:45 மணிக்கு புறப்பட்டனர். கரூர் கலெக்டர் தங்கவேல், டி.ஆர்.ஓ., கண்ணன், எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, கிருஷ்-ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி உள்பட பலர் பங்கேற்-றனர். அப்போது, கம்பத்திற்கு வரவேற்பு கொடுக்கும் விதமாக மேளதாளங்கள் முழங்கப்பட்டன. பக்தர்களும் புனிதநீர் குடங்-களுடன் கோவிலை நோக்கி சென்றனர். பசுபதிபாளையம் ஐந்து-ரோடு உள்ளிட்ட பகுதியில் பக்தர்கள் திரண்டு நின்று கம்பத்தை வணங்கினர். பின், மாரியம்மன் கோவிலை கம்பம் வந்தடைந்தது. மாலை, 6:30 மணிக்கு கம்பமானது பசுபதிபாளையம் அமராவதி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. அப்போது வேப்-பிலைகள், பூக்கள் உள்ளிட்டவற்றை, கம்பத்திற்கு கட்டி பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து ஆற்றி-லிருந்து கோவிலுக்கு கம்பம் புறப்பட்டது. பக்தர்கள் மல்லிகை பூக்கள் உள்ளிட்டவற்றை துாவியும், தாம்பூலத்தட்டில் வாழைப்-பழம், தேங்காய் ஆகியவற்றை எடுத்து வந்து படைத்தும் வழி-பாடு செய்தனர்.பின், அம்மனின் சன்னதி எதிரே கம்பம் நடப்பட்டு திருவிழா தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து சென்றனர். வரும், 16ல் பூச்சொரிதல் விழா, 18ல் காப்பு கட்டுதல், 26ல் தேரோட்டம், 27ல் மாவிளக்கு ஊர்வலம், பால் குடம் ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், 28ல் கம்பம் அம-ராவதி ஆற்றுக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. மேலும் ஜூன், 5ல் பஞ்ச பிரகாரம், 6ல் புஷ்ப பல்லக்கு, 7ல் ஊஞ்சல் உற்சவம், 8ல் அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சிகள் நடக்-கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி