தாயுமானவர் திட்டத்தில் 28,694 ரேஷன் கார்டுதாரர் பயன் கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தகவல்
கரூர்: ''முதல்வர் தாயுமானவர் திட்டத்தால், 28,694 ரேஷன்கார்டுதாரர் பயன்பெறுவர்,'' என, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி கூறினார்.கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவில், முதல்வர் தாயுமானவர் திட்டத்தில், வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, பயனாளிகள் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.அப்போது, அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக கூட்டு-றவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில், 159 ரேஷன் கடைகளில், 1.36 லட்சம் ரேஷன் கார்டு-களும், ஊரக பகுதிகளில், 493 கடைகளில், 2.04 லட்சம் ரேஷன் கார்டுகளும் என மொத்தம், 652 ரேஷன் கடைகளில், 3.40 லட்சம் கார்டுகள் உள்ளன. இந்த திட்டத்தில், நகர்ப்புறங்களில், 70 வயது பூர்த்தி அடைந்த, 8,913 ரேஷன் கார்டுதாரர்கள், மாற்-றுத்திறனாளிகளின், 335 ரேஷன் கார்டுகள் என மொத்தம், 9,248 கார்டுகள் உள்ளன. ஊரக பகுதிகளில், 70 வயது பூர்த்தி அடைந்த, 19,029 கார்டுகள், 417 மாற்றுத்திறனாளிகளின் கார்டுகளும் என மொத்தம், 19,446 கார்டுதாரர்கள் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம், 28,694 கார்டுதாரர்கள், இத்திட்டத்தால் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தில் பயனாளிகளின் பெயர் விடுபட்டிருந்தால், மாவட்ட வழங்கல் அலுவலகத்தையோ அல்லது வட்டார வழங்கல் அலுவலகத்-தையோ தொடர்பு கொண்டு இணைத்து கொள்ளலாம். இவ்-வாறு, அவர், கூறினார்.கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சர-வணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனகராஜ், ராஜா, கூட்-டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (பொ) கந்தராஜா, மாநக-ராட்சி கமிஷனர் சுதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் உள்-பட பலர் பங்கேற்றனர்.