உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பிளாட்பார்ம் ஆக்கிரமிப்பு

கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பிளாட்பார்ம் ஆக்கிரமிப்பு

கரூர்: கரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் கடைகள் ஆக்கிரமிப்பால், பயணிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.கரூர், திருமாநிலையூரில், 40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. அங்கு, 68 பஸ்கள் நிறுத்தும் வகையிலும், 82 கடைகள், கழிப்பறை, உணவுக்கூடம், பார்க்கிங் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. கடந்த அக்., 6 முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளது.அதில், 30 சதவீதம் மேல் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பஸ் ஸ்டாண்ட் திறந்து, 2 மாதம் ஆன நிலையில், பஸ் ஸ்டாண்ட் நடைமேடைகளை ஆக்கிரமிக்க தொடங்கி விட்டனர். அதில், பஸ் ஸ்டாண்ட் வளாக நுழைவாயில் ஓட்டல் உட்பட அனைத்து கடைக்காரர்களும், நடைமேடையை ஆக்கிரமித்து, வியாபார பொருட்களை நிரப்பி வைத்துள்ளனர். இதனால், பயணிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.கடைகள் முன் பஜ்ஜி, போண்டா, வடை போன்றவற்றை ஆபத்தான வகையில் காஸ் சிலிண்டர் வைத்து தயாரிக்கின்றனர். நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டுள்ளதால், பயணிகள், வயதானவர்கள் பஸ்களில் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். பஸ்சை விட்டு இறங்கி நடைபாதையில் நடக்க முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை