உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வே.பாளையத்தில் கூல் ஊற்றும் திருவிழா

வே.பாளையத்தில் கூல் ஊற்றும் திருவிழா

வேலாயுதம்பாளையம்: ஆடிவெள்ளியை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் மகா மாரியம்மனுக்கு கூல் ஊற்றும் விழா நடந்தது.வேலாயுதம்பாளையம் மகா மாரியம்மனுக்கு ஆடி மாதம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சுற்றுப்புற மகளிர் மூலம் கூல் ஊற்றும் விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டுக்கான இரண்டாவது ஆடி வெள்ளிக்கிழமை அமாவாசைக்கு முதல்நாள் வருவதால் அம்மனுக்கு மிகவும் உகந்தது என்று நேற்று மதியம் அம்மனுக்கு, பால், இளநீர், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உட்பட பல்வேறு

வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் பெண்களுக்கு திருமஞ்சனம், மாங்கல்யம், வளையல் உள்ளிட்ட சுமங்கலி ஆபரணங்கள் பரிமாறி கூல்ஊற்றும் திருவிழாவும் நடந்தது.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை