உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தாய், மகளிடம் வழிப்பறி செய்த வாலிபரை பிடித்த கரூர் போலீசார்

தாய், மகளிடம் வழிப்பறி செய்த வாலிபரை பிடித்த கரூர் போலீசார்

கரூர், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்த புகழேந்திரன் மனைவி கோமதி, 49; இவரது மகள் பவித்ரா, 26. இருவரும், வளையப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே பஸ் ஸ்டாப்பில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அணிந்திருந்த, 3.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மர்ம நபர், மின்னல் வேகத்தில் காரில் ஏறி தலைமறைவானார்.கரூர் சாலையில் சென்றதால், மோகனுார் போலீசார், கரூர் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, பசுபதிபாளையம் போலீசார் வாகன தணிக்கையில், நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டனர். அப்போது, கரூர்- - திருச்சி நெடுஞ்சாலையில் காந்திகிராமம் அருகே, போக்குவரத்து நகரில் வேகமாக வந்த காரை பேரிகார்டு வைத்து பிடிக்க முற்பட்டனர்.அப்போது, அந்த கார் திரும்ப முற்பட்டபோது பசுபதிபாளையம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நந்தகோபால், அவரது டிரைவர் கோபியும் ஜீப்பை விட்டு இறங்கி, கார் கண்ணாடியை கையால் உடைத்து பிடித்துள்ளனர்.போலீசார் நடத்திய விசாரணையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் திருச்சி மாவட்டம், பெரிய மிளகுபாறை ராஜா தெருவை சார்ந்த வெங்கட்ராமன், 37, என்பது தெரியவந்தது.அவரை, மோகனுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், வெங்கட்ராமனை கைது செய்து, கார் மற்றும் தங்க சங்கிலியின் பாதியை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை