மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்
20-Oct-2024
கரூர்: கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த, கோபால் மகள் சந்தியா, 20; நாமக்கல் மாவட்டம், திருச்செங்-கோட்டில் உள்ள, தனியார் கல்லுாரியில் பி.காம்., கம்ப்யூட்டர் சயின்ஸ், இரண்டாமா ண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 12 ல் சித்தி வீட்டில் இருந்து வெளியே சென்ற சந்தியா, திரும்பி வரவில்லை. இதுகுறித்து, சந்தியாவின் தாய் கிருத்தி கா, 38; போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.* கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி லட்சுமி, 54; இவர் கடந்த செப்., 30 ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்ப-வில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், லட்சுமி செல்லவில்லை. இதுகுறித்து, லட்சுமியின் சகோதரர் மனோகரன், 52; போலீசில் புகார் செய்தார். வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Oct-2024