ஈரோடு மார்க்கெட்டுக்கு வரத்தான கேரள அன்னாசி
ஈரோடு: கேரளாவில் இருந்து, ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு, அன்னாசி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு, கேரள மாநிலம் கொழிச்சாம்பாறை, சாலக்குடி, மலப்புரம், கொரடி உள்ளிட்ட பகு-திகளில் இருந்து, அன்னாசி பழம் வரத்தாகி உள்ளது. நேதாஜி மார்க்கெட்டில் குவிந்துள்ள அன்னாசி பழங்களை, உள்ளூர் வியா-பாரிகள் மட்டுமின்றி, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதி-களில் இருந்து வரும் வியாபாரிகள் விற்பனைக்காக வாங்கி செல்-கின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த மாதம் ஒரு கிலோ அன்னாசிபழம், 40 முதல், 50 ரூபாய் வரை விற்றது. தற்போது, கேரள மாநிலத்திலிருந்து வழக்கத்தை விட வரத்து அதிகரித்ததால் ஒரு கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது,' என்றனர்.