கோவம்ச முன்னேற்ற நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கரூர்: தமிழ்நாடு கோவம்ச முன்னேற்ற நலச்சங்கத்தின், கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், (ஆண்டிப்பண்டாரம் பிரிவு) மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமையில், காந்தி கிராமத்தில் நடந்தது.அதில், கரூர் மாவட்டத்தில் கிராம கோவில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, 60 வயது மேற்பட்ட கிராம கோவில் பூசாரிக-ளுக்கு, ஓய்வூதியம் வழங்க வேண்டும், கரூர் மாவட்டத்தில் உள்ள சில கோவில்களில், பரம்பரை பூசாரிகளை நியமிக்க வேண்டும், கிராம கோவில்களுக்கு சொந்தமான பூஜை மான்ய நிலங்களை, தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் சிவபிரகாசம், மாவட்ட செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் சுந்தரம், மகளிர் அணி செயலாளர் சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.