உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அகில இந்திய கூடைப்பந்து போட்டி கே.எஸ்.இ.பி.,-ஐ.ஓ.பி., வங்கி அணி வெற்றி

அகில இந்திய கூடைப்பந்து போட்டி கே.எஸ்.இ.பி.,-ஐ.ஓ.பி., வங்கி அணி வெற்றி

கரூர், கரூரில் நடக்கும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், சென்னை ஐ.ஓ.பி., மற்றும் கே.எஸ்.இ.பி., அணி வெற்றி பெற்றது.கரூர் கூடைப்பந்து குழு சார்பில், எல்.ஆர்.ஜி., நாயுடு சுழற்-கோப்பைக்கான, 65வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி கடந்த, 22 முதல், திருவள்ளுவர் மைதானத்தில் நடந்து வருகிறது.வரும், 27 வரை போட்டி நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் பிரிவில் கே.எஸ்.இ.பி., அணியும், பெங்களூரு யங் ஒரியன்ஸ் அணியும் மோதின.அதில், 79க்கு67 என்ற புள்ளிக்கணக்கில், கே.எஸ்.இ.பி., அணி வெற்றி பெற்றது. அதே பிரிவில் சென்னை ஐ.ஓ.பி., வங்கியும், இந்தியன் வங்கி அணிகளும் மோதின.அதில், 82க்கு78 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை ஐ.ஓ.பி., வங்கி அணி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி