மாநில அளவில் முதலிடம் பிடித்த கோ கோ, கால்பந்து அணிக்கு பாராட்டு
கரூர், மாநில அளவில் கோ கோ, கால்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற மகளிர் அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன்கள், பட்டா மாறுதல், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு, 459 மனுக்கள் பெறப்பட்டன.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 4 பேருக்கு காதொலி கருவி மற்றும் சக்கர நாற்காலி, 20,055 ரூபாய் மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 10 பேருக்கு சீர்மரபினர் நலவாரிய அட்டை என மொத்தம், 14 பேருக்கு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மாநில அளவிலான கோ கோ, கால்பந்து போட்டிகளில் கரூர் மாவட்ட மகளிர் அணி முதலிடம் பெற்றதற்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், சப்-கலெக்டர் பிரகாசம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், கலெக்டர் நேர்முக உதவியாளர் (நிலம்) பச்சமுத்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.