உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நர்சை கர்ப்பமாக்கி ஏமாற்றிய குமாரமங்கலம் காதலன் கைது

நர்சை கர்ப்பமாக்கி ஏமாற்றிய குமாரமங்கலம் காதலன் கைது

குளித்தலை, குளித்தலையில் ஒரு தனியார் மருத்துவமனையில், 25 வயது இளம்பெண் நர்சாக பணிபுரிந்தார். இவருக்கும் குமாரமங்கலத்தை சேர்ந்த காளிதாஸ், 22, என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்ததில் இளம்பெண் கர்ப்பமானார். கருவை கலைத்த காளிதாஸ், திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி நெருக்கமாக இருந்ததில், மீண்டும் கர்ப்பமானார். இதுகுறித்து காளிதாசின் பெற்றோர், சகோதரியிடம் தெரிவித்த நிலையில், கட்டாயப்படுத்தி மீண்டும் கருவை கலைத்தவர், பெண்ணிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இந்நிலையில் குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த, ௯ல் திருமணம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நர்ஸ், குளித்தலை மகளிர் போலீசில் புகாரளித்தார். விசாரித்த போலீசார் காதலன், அவரது பெற்றோர், சகோதரி மீது வழக்குப்பதிவு செய்தனர். காளிதாஸ், அவரது தந்தை கதிர்வேலை கைது செய்த போலீசார், அவரது தாய் சின்னபொண்ணு, அக்கா பொண்ணு சிறும்பாயியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !