கரூரில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் குத்துவிளக்கு பூஜை
கரூர்: கரூர், பசுபதீஸ்வரா ஐயப்ப சேவா சங்கம் சார்பில், பசுபதீஸ்வரா ஐயப்பன் கோவில் முன், நேற்று இரவு குத்து விளக்கு பூஜை நடந்தது.கரூர் பசுபதீஸ்வரா சேவா சங்கம் சார்பில், நேற்று முன்தினம் ஐயப்பன் கோவில் முன், 38 வது ஆண்டு விழாவையொட்டி கொடியேற்று விழா, தசாவதார ேஹாமம், மகா லட்சுமி ேஹாமங்கள் நடந்தன.நேற்று காலை, அமராவதி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் ஊர்-வலம், ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஏகதின லட்ச்-சார்ச்சனை நடந்தது. பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்-பட்டது.தொடர்ந்து இரவு குத்து விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேற்றனர். பிறகு, அபிேஷக் ராஜூ, சாய் சமர்த் ஆகியோரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.