உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மொபட் மீது டிப்பர் லாரி மோதி கூலி தொழிலாளி பலி

மொபட் மீது டிப்பர் லாரி மோதி கூலி தொழிலாளி பலி

குளித்தலை, மொபட் மீது, டிப்பர் லாரி மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தார். குளித்தலை அடுத்த தோகைமலை பஞ்., புது கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 52. இவர் மொபட்டில் சொந்த வேலையாக மணப்பாறை சென்று விட்டு, மீண்டும் தனது ஊருக்கு நேற்று மதியம் வந்து கொண்டிருந்தார். தோகைமலை ஒன்றிய அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே குளித்தலையிலிருந்து மணப்பாறைக்கு எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரி வேகமாக வந்து மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணி பலத்த காயமடைந்தார்.அருகில் இருந்தவர்கள் உதவியுடன், 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் சோதித்தபோது, ஏற்கனவே சுப்பிரமணி இறந்து விட்டதாக கூறினர்.இதுகுறித்து டிப்பர் லாரி டிரைவர் குப்பமேட்டுப்பட்டியை சேர்ந்த கருப்பையா, 32, மீது தோகைைலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை