உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெஞ்சில் தறி மோதியதில் கூலி தொழிலாளி பலி

நெஞ்சில் தறி மோதியதில் கூலி தொழிலாளி பலி

கரூர்; கரூர் அருகே, நெஞ்சில் தறி மோதியதில் கூலி தொழிலாளி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், வேப்பம்பாளையம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பழனி சாமி, 55, கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், கரூர் அருகே ஆண்டாங்கோவில் உழைப்பாளி நகரில், கருப்பையா என்பவருக்கு சொந்தமான பட்ட-றையில், தறியில் லுங்கி, வேட்டியை நெசவு செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத-விதமாக தறி, பழனிசாமியின் நெஞ்சில் மோதி-யது.அதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதைய-டுத்து, அருகில் இருந்தவர்கள் பழனிசாமியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்து-வமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், பழ-னிசாமி உயிரிழந்தார்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை