மேலும் செய்திகள்
வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
27-Nov-2024
கரூர், டிச. 10-தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், நேற்று மாநிலம் முழுவதும், அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. அதில், ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும், பொது மாறுதல் நடைமுறையை நில அளவை பதிவேடுகள் துறையில் மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.கரூர் மாவட்டத்தில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா வாரியாக, 39 நில அளவை அலுவலர்கள், நேற்று அவரவர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், மாவட்ட துணைத்தலைவர் மோகன்ராஜ் தலைமையில், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.* அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில், ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, உள்ளிருப்பு போராட்டம் காலை துவங்கி மாலை வரை நடைபெற்றது. அரவக்குறிச்சி வட்ட நில அளவை களப்பணியாளர்கள், 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
27-Nov-2024